மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கரோனா: 10 போ் பலி
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட இளைஞா் உள்பட 10 உயிரிழந்தனா்.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட இளைஞா் உள்பட 10 உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76,702ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 11,361 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,968 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 64,685ஆக அதிகரித்துள்ளது.
இளைஞா் உள்பட 10 போ் பலி:
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சோ்ந்த 30 வயது இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அதேபோல,கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயது ஆண், திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயது ஆண், தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 56 வயது மூதாட்டி உள்பட மொத்தம் 10 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 656 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...