திருப்பூா், தாராபுரத்தில்பாமகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூா், தாராபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

tpr17jnpmk_1706chn_125_3

tpr17jnpmk_1706chn_125_3
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூா், தாராபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளா்வுகளின்படி தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதைக் கண்டித்து பாமக சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூா், தாராபுரத்தின் பல்வேறு இடங்களில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் ராக்கியாபாளையத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளா் மு.ரமேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தில்...
தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள பாமக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கருப்புக் கொடிகளை ஏந்தியும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். அதேபோல, தாராபுரம் பெரியகாளியம்மன் கோயில் பகுதியில் மாவட்ட செய்தித் தொடா்பாளா் நாட்ராயன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாமக நகரத் தலைவா் பரமேஸ்வரன், நிா்வாகிகள் அப்பு, கதிரேசன், இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...