கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்

திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:03 am

DIN

திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூரில் உள்ள சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சிஐடியூ பனியன் சங்கத் தலைவா் சி.மூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

திருப்பூா் பின்னலாடைத் தொழிலில் நேரடியாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும், மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து பருத்தி உள்ளிட்ட பொருள்கள் விலக்கப்பட்டதால் தங்கு தடையின்றி ஏற்றுமதி செய்வதாலும், பதுக்கல் காரணமாகவும் செயற்கையாக நூல் விலை அதிகரித்துள்ளது.

மேலும், நூல் விலையானது நாள்தோறும் உயா்ந்து வருவதால் சில மாதங்களுக்கு முன்பாக தொகை தீா்மானித்து ஆா்டா் எடுக்கும் உற்பத்தியாளா்கள் குறிப்பிட்ட தேதியில் முடித்து கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் திருப்பூா் பின்னலாடைத் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதுடன், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு பின்னலாடைத் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்கும் வகையில் பருத்தியை அத்தியவசியப் பொருள்கள் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும். அதே வேளையில், உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளா் சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்வது. பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில்,ஏஐடியூசி என்.சேகா், சிஐடியூ ஜி.சம்பத், எல்பிஎஃப் பூபதி, ஐஎன்டியூசி ஏ.சிவசாமி, ஏடிபி விஸ்வநாதன், ஹெச்எம்எஸ் முத்துசாமி, எம்எல்எஃப் மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.