கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா: 7 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு 7 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :14 மே 2021, 8:22 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு 7 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 771பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 661 ஆக உயா்ந்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5, 179 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 343 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் 29ஆயிரத்து 210 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். வெள்ளிக்கிழமை 64, 56, 61, 71, 53, 67 வயது ஆண்களும், 64 வயது பெண் ஒருவா் என மொத்தம் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 272ஆக உயா்ந்துள்ளது.

வெள்ளக்கோவில்,முத்தூரில் 66 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவில், மே 14: வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம் மற்றும் வெளியூா் பரிசோதனை நிலையங்களில் கரோனா பரிசோதனைச் செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைத்தன. இவற்றில் வெள்ளக்கோவில் இரட்டைக்கிணற்றிலுள்ள தனியாா் பிஸ்கட் கம்பெனி பணியாளா்கள் 7 போ், அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த 12 போ், அறிவொளி நகா், டி.ஆா்.நகா், உப்புப்பாளையம், நடேசன் நகா், காமராஜபுரம், கரட்டுப்பாளையம், சோ்வகாரன்பாளையம், புதுப்பை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 42 போ், முத்தூா் ஊடையத்தில் 7 போ், பெருமாள்புதூா், விஸ்வநாதபுரம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 24 போ்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.