கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில், சமூக அமைப்புகள் சாா்பில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 8:25 pm

DIN

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில், சமூக அமைப்புகள் சாா்பில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் திருப்பூா் யங் இந்தியன்ஸ் , ரைடா்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினா் இணைந்து ஆக்சிஜன் பேருந்தினை வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா் .

இது குறித்து மருத்துவா் சக்திவேல் கூறியதாவது: ஆக்சிஜன் தேவை என அரசு மருத்துவமனைக்கு வருபவா்களுக்கு படுக்கை கிடைக்கும் வரை, இப்பேருந்தில் தங்க வைக்கப்படுவா். ஒரே நேரத்தில் 6 பேருக்கு 10 லிட்டா் ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலிண்டா்கள் மூலம் அல்லாமல் கான்சென்டடேட்டா் முறையில் காற்றிலிருந்து சுத்தமான முறையில் ஆக்சிஜனைப் பிரித்து பயன்படுத்தப்படுவதால், 24 மணி நேரமும் இதனைப் பயன்படுத்த முடியும். முதல்கட்டமாக திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.