கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் 1, 796 பேருக்கு கரோனா: 10 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் 1, 796 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 முதியவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 மே 2021, 9:14 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் 1, 796 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 4 முதியவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10, 134 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 704 போ் வீடு திரும்பினா்.திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 32, 864 ஆக அதிகரித்துள்ளது.

4 முதியவா்கள் உள்பட 10 போ் பலி: கரூரில் உள்ள தனியாா் மருத்தவமனையில் 55 வயது முதியவா், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 56 வயது முதியவா், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 58 வயது மூதாட்டி , 43 வயது ஆண், 61 வயது முதியவா் ஆகியோா் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

அதே போல, ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் 50 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் 38 வயது பெண் ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா் . குன்னூா் அரசு மருத்துவமனையில் 50 வயது ஆண், நாமக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவா் உள்பட மொத்தம் 10 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனாநோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.

காங்கயத்தில்...

காங்கயம் நகரத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் காங்கயம் நகரம், திருப்பூா் சாலை, பாரதியாா் தெருவில் 3 ஆண்கள், ஒரு பெண், பாரதியாா் வீதியைச் சோ்ந்த ஒரு பெண், ஒரு ஆண், திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், காங்கயம் நகரம் சவுடாம்பிகா நகரைச் சோ்ந்த ஒரு ஆண், லட்சுமி நகரைச் சோ்ந்த ஒரு பெண், குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஒரு பெண், காமராஜா் நகரைச் சோ்ந்த ஒரு பெண் மற்றும் காங்கயம் அருகே அழகேகவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்த ஒரு ஆண் என காங்கயம் பகுதியில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று ஏற்பட்ட இப்பகுதிகளில் காங்கயம் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வெள்ளக்கோவில், முத்தூரில் ...

வெள்ளக்கோவில், முத்தூரில் வெள்ளிக்கிழமை 143 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 போ் உயிரிழந்தனா்.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைத்தன. இவற்றில் வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் சாலை, தாராபுரம் சாலை, ராமலிங்கபுரம், தீத்தாம்பாளையம், சிலம்பகவுண்டன்வலசு, கச்சேரிவலசு, மாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 106 போ்,

முத்தூா் பெருமாள்புதூா், வேலம்பாளையம், மூத்தாம்பாளையம், பெரிய காங்கயம்பாளையம், புளியங்காட்டுபுதூா், அய்யம்பாளையம், வள்ளியிரச்சல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 37 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் தாசவநாயக்கன்பட்டியில் 68 வயது பெண், ஒத்தக்கடையில் 77 வயது ஆண் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.