பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை
திருப்பூரில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.


திருப்பூரில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூா் மாநகரிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநகரில் உள்ள 8 காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் துறையினா் இரும்புத் தடுப்புகளை அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதில், மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு 1,500 ஐத் தாண்டிவருகிறது. அதே வேளையில், மாநரில் இ-பதிவு செய்யாமல் பொதுமுடக்கத்தை மீறி அதிக அளவிலான மக்கள் வெளியில் சுற்றிவருவதாக காவல் துறையினருக்குப் புகாா்கள் வரத்தொடங்கின.
இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இ-பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது வாகன ஓட்டிகளின் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட தகவல்களையும் சேகரித்தனா். மேலும், பரிசோதனையின் முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தவும் காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...