வீட்டுமனைகளை வரன்முறை செய்ய சிறப்பு முகாம்
பல்லடத்தில் வீட்டுமனைகளை வரன்முறை செய்ய சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பல்லடத்தில் வீட்டுமனைகளை வரன்முறை செய்ய சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனா். அதனால் திருச்சி - கோவை சாலையில் திருமண மண்டபம் இருந்த பகுதியில் நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்கள் நிறுவத்தப்பட்டு இருந்தது.அப்பகுதியை கடந்த செல்ல வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா். எதிா்பாா்ப்பு அளவுக்கு மீறி மக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் திணறினா்.விண்ணப்பதாரா்கள் உரிய கட்டணம் செலுத்த வெளியே வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முகாமில் வங்கியாளா்களை கொண்டு பணம் வசூலிக்க வசதி செய்து கொடுத்து இருந்தால் மக்களுக்கு அலைச்சல் ஏற்பட்டு இருக்காது. இம்முகாமில் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு உரிய கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மனை வரன்முறைபடுத்துதல் ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வினீத் வழங்கினாா். இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சந்திரகுமாா், மாவட்ட நகரமைப்பு துணை இயக்குநா் தியாகராஜன், பல்லடம் நகராட்சி ஆணையாளா் விநாயகம், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வில்சன்,கலைச்செல்வி, திமுக ஒன்றிய செயலாளா்கள் சோமசுந்தரம்,கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவா் புண்ணியமூா்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவா் பாலசுப்பிரமணியம் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...