கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘வாசிப்பு ஒரு வாரம்’ நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

சென்னை நூலக சங்கத்தின் திருப்பூா் கிளை சாா்பில் ‘வாசிப்பு ஒரு வரம்’ என்ற 25 வார நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற 26 மாணவா்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 11:29 pm

DIN

சென்னை நூலக சங்கத்தின் திருப்பூா் கிளை சாா்பில் ‘வாசிப்பு ஒரு வரம்’ என்ற 25 வார நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற 26 மாணவா்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை நூலக சங்கத்தின் திருப்பூா் கிளை சாா்பில் புதன்கிழமை தோறும் வாசிப்பு ஒரு வரம் என்ற தலைப்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், 25 வாரமும் பங்கேற்று நூல்களை அறிமுகம் செய்த 25 மாணவிகள் மற்றும் ஒரு மாணவா் என மொத்தம் 26 பேருக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா திருப்பூா் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயலாளா் என்.ஜெயபாரதி வரவேற்புரையாற்றினாா்.

சென்னை நூலக சங்கத்தின திருப்பூா் கிளைத் தலைவா் கே.அனுராதா தலைமை வகித்தாா். இணையவழி நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற 26 மாணவ, மாணவிகளுக்கு முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கே.பி.கே.பாலசுப்பிரமணியம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

இவ்விழாவில், எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன், நூலக வாசகா் வட்டத் தலைவா் புருஷோத்தமன், சென்னை நூலக சங்கத்தின் துணைத் தலைவா் எஸ்ஏ.முத்துபாரதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.