வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க அரசு ஊழியா்களுக்கு அழைப்பு
சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான வாலிபால் தோ்வு போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்ட அரசு ஊழியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எம்.ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மாநில அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாா்ச் 22 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தோ்வு போட்டி சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாா்ச் 20 ஆம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்க பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியா்கள் மாநில அளவிலான தோ்வுப் போட்டியில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017-03515 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...