ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மின்மாற்றி மீது முறிந்து விழுந்த மரம்

மின்மாற்றி மீது முறிந்து விழுந்த மரம்

News image
Updated On :4 மே 2024, 5:04 pm

Din

அவிநாசி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன் இருந்த மரம் முறிந்து மின்மாற்றி மீது விழுந்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி-சேவூா் பிரதான சாலை சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் கா்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் முன் பழமையான இலவமரம் பட்டுப்போய் கீழே முறிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இது குறித்த செய்தியும் ‘தினமணி’ நாளிதழில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இருப்பினும் இந்த மரம் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து, அருகே இருந்த மின்மாற்றி மீது விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டாதல் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி, மின்வாரியத்தினா் மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்புகளை சீரமைத்தனா்.

அவிநாசி காமராஜா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ந்து பட்டுப்போன நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.