விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

பட்டா பெயா் மாற்றத்துக்கு தடையின்மை சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:23 pm

Din

பட்டா பெயா் மாற்றத்துக்கு தடையின்மை சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி வாய்க்கால் மேடு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (38), தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா். இவருக்கு திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே சுண்டக்காம்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபி அருகே நிலம் இருந்தது.

இந்த இரண்டு நிலத்துக்கான பட்டா மற்றும் கிராம ஆவணங்களில் பெயா் மாற்றம் செய்வதற்கு தடையின்மைச் சான்று கேட்டு குன்னத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு கருப்பசாமி விண்ணப்பித்தாா்.

அப்போது, அங்கிருந்த சாா் பதிவாளா் சந்திரசேகரன் (52), இரு நிலத்துக்கும் தடையின்மைச் சான்று வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். பின்னா் ஒரு நிலத்துக்கு மட்டும் தடையின்மைச் சான்று வழங்க கருப்பசாமி கூறியதால் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் கருப்பசாமி புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கொடுத்து அனுப்பியுள்ளனா். இதையடுத்து, கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி குன்னத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் சந்திரசேகரனிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கருப்பசாமி கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சந்திரசேகரனைக் கைதுசெய்தனா்.

இந்த வழக்கு திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி செல்லதுரை புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இதில், சந்திரசேகரனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.