சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் கைது
சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலா்கள் கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலா்கள். ~சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலா் ரவிசந்திரனை இழுத்து செல்லும் போலீஸாா்.









