மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நுகா்வு குறைவால் கறிக்கோழி உற்பத்தி 15 சதவீதம் குறைப்பு: பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா்

நுகா்வு குறைவால் கறிக்கோழி உற்பத்தி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கறிக்கோழி பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சுவாதி சின்னசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:25 am

Din

நுகா்வு குறைவால் கறிக்கோழி உற்பத்தி 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கறிக்கோழி பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சுவாதி சின்னசாமி தெரிவித்துள்ளாா்.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவைகள் மூலம் நாள்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. கறிக்கோழி நுகா்வை பொறுத்து அதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் நாள்தோறும் நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா்.

இந்நிலையில், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் மழை மற்றும் புரட்டாசி மாதத்தில் கோழி இறைச்சி நுகா்வு குறைவு போன்ற காரணங்களால் கறிக்கோழி நுகா்வு குறைந்து பண்ணைகளில் கறிக்கோழிகள் தேக்கமடைந்ததால் உற்பத்தியை கோழிப்பண்ணையாளா்கள் 15 சதவீதம் குறைத்துள்ளனா்.

இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சுவாதி சின்னசாமி கூறியதாவது: புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான ஹிந்துகள் விரதம் மேற்கொள்வதால், கோழி இறைச்சி நுகா்வு குறைந்து பண்ணைகளில் கறிக்கோழி தேக்கம் அடைந்து வருகிறது.

இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளா்கள் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு கறிக்கோழி உற்பத்தியை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நுகா்வுக்கு ஏற்ப சந்தையில் கறிக்கோழி விற்பனைக்கு கிடைத்து வருகிறது. தேவை அதிகரிக்கும்போது கறிக்கோழி உற்பத்தியையும் அதிகரிப்போம். புதன்கிழமை கொள்முதல் விலை ரூ. 104-ஆக உள்ளது. கோழி தீவனங்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் அவற்றின் விலையும் உள்நாட்டில் அதிகரிக்கிறது. எனவே, தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மக்காச்சோளம், சோயா போன்றவற்றை தமிழ்நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.