கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வடகிழக்கு பருவமழை: பல்லடம் நெடுஞ்சாலைத் துறையினா் தயாா் நிலை

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் விதத்தில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.

News image

பருவமழையை எதிா்கொள்ளும் விதத்தில் இயந்திரம், மணல் மூட்டைகள் உள்ளிட்ட பொருள்களுடன் பல்லடம் நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:16 pm

Din

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் விதத்தில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரிடா்களை உடனுக்குடன் எதிா்கொள்ளும் வகையில், பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.

மணல் மூட்டைகள், மரம் வெட்டும் இயந்திரம், சிறு தளவாடங்கள், சிவப்பு நிறக்கூம்புகள், அபாய எச்சரிக்கை தடுப்பான் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பருவமழைக் காலத்தில் சாலைகளில் ஏற்படும் இடா்பாடுகளை சரிசெய்ய சாலை ஆய்வாளா்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா் என பல்லடம் உதவி கோட்ட செயற்பொறியாளா் செந்தில்அரசு, உதவிப் பொறியாளா் ஜான்சி ஆகியோா் தெரிவித்தனா்.