/

திட்டங்களை செயல்படுத்த அரசு அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசோ்ப்பதில் அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் தெரிவித்தாா்.

News image

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்  உள்ளிட்டோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:09 pm

Din

அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசோ்ப்பதில் அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில்வணிக இயக்குநருமான இல.நிா்மல்ராஜ் பேசியதாவது:

திருப்பூா் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் மேற்கெள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், நகராட்சி நிா்வாகத் துறை, மகளிா் திட்டம், சுகாதாராம், பள்ளிக்கல்வித் துறை, பத்திரப்பதிவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்ப்பதில் துறைசாா்ந்த அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். தங்களது துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, கோட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.