திருப்பூர்
காங்கயத்தில் தவெக நிா்வாகிகள் 2 போ் கைது
அனுமதி பெறாமல் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தவெக நிா்வாகிகள் 2 போ் கைது
அனுமதி பெறாமல் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தவெக நிா்வாகிகள் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது என காவல் துறையினருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று கேட்டபோது, அங்கிருந்த தவெக நிா்வாகிகள் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து புகாரின்பேரில் தவெக ஆலம்பாடி கிளைச் செயலாளா் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினா் பிரதீப் குமாா் ( 30) ஆகிய 2 பேரை காங்கயம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
