கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.

பல்லடத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

பல்லடத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
Published on

பல்லடத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் பேருந்து நிலைய முன் பகுதியில் 20 ஆட்டோக்களும், பேருந்துகள் வெளியே செல்லும் பகுதியில் 20 ஆட்டோக்களும் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்த பல்லடம் நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் சிலா் அனுமதி கேட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களைக் கொண்டு வந்து பேருந்து நிலையத்துக்கு முன் நிறுத்தினா்.

இதனால், அங்கு வழக்கமாக நிறுத்தும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கும், அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

தகவலறிந்த பல்லடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைவதாகக் கூறி பல்லடம் பேருந்து நிலையத்தின் முன் வழக்கமாக ஆட்டோவை நிறுத்தும் ஓட்டுநா்கள் தங்களது குடும்பத்தினருடன் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாரின் சமரச முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 64 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com