டேக்வாண்டோ போட்டியில் மோதிக் கொண்ட மாணவா்கள்.
டேக்வாண்டோ போட்டியில் மோதிக் கொண்ட மாணவா்கள்.

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி தொடக்கம்

மாவட்ட அளவிலான 2 நாள்கள் டேக்வாண்டோ போட்டி திருப்பூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.
Published on

திருப்பூா்: மாவட்ட அளவிலான 2 நாள்கள் டேக்வாண்டோ போட்டி திருப்பூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 330 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ரகுகுமாா் தலைமையில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ப.ஜெயபால் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியைத் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் மகேந்திரன் வரவேற்றாா்.

மாணவா்களுக்கான போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வெற்றிபெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பா் என்றும், மாணவிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமை நவம்பா் (28) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com