/
திருப்பூரில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே வணிக வரித் துறை துணை மாநில வரி அலுவலா் ஜெயசீலன், காவல் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வாடகை காரில் வந்த 2 பயணிகளின் உடைமைளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் ரூ.9.90 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.
பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் அதிகாரிகள், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



