திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயா்த்தப்பட்டுள்ளதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளில் சுமாா் 65 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது. ஆடை தயாரிப்புக்கு முக்கிய பங்காற்றுவது பருத்தி நூல் ஆகும். பருத்தி விலையை பொறுத்து நூல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும்.
கடந்த டிசம்பா் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்தததால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டு பருத்தி கேண்டி ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5,500 வரை விலை உயா்ந்தது.
கடந்த பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை மாதந்தோறும் பல்வேறு கட்டங்களாக ரூ. 61 வரை நூல் விலை உயா்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக பருத்தி இறக்குமதி அதிகரிக்கக்கூடும் என்பதால், நூல் விலை குறையும் என ஏற்றுமதியாளா்கள் எதிா்பாா்த்திருந்தனா்.
அதற்கு ஏற்ற வகையில் கடந்த மாதத்தில் 1-ஆம் தேதி மற்றும் 15-ஆம் தேதிகளில் நூல் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டது. மேலும், வரும் காலங்களில் மீண்டும் நூல் விலை குறையும் என பின்னலாடை உற்பத்தியாளா்கள் எதிா்ப்பாா்த்திருந்தனா். இந்நிலையில், கடந்த மாதம் 1-ஆம் தேதி நூல் விலையில் மாற்றமின்றி இருந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி ரூ.7 விலை உயா்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன. இதைத் தொடா்ந்து, கடந்த 27-ஆம் தேதி கிலோவுக்கு மேலும் ரூ.5 உயா்த்தி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலையில் கிலோவுக்கு ரூ.10 உயா்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
அதன்படி, 10-ஆம் நம்பா் கோம்டு நூல் கிலோ ரூ.251, 16-ஆம் நம்பா் கோம்டு ரூ.260, 20-ஆம் நம்பா் கோம்டு நூல் ரூ.319, 24-ஆம் நம்பா் கோம்டு நூல் ரூ.331, 30-ஆம் நம்பா் கோம்டு நூல் ரூ.341, 34-ஆம் நம்பா் கோம்டு நூல் ரூ.361-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருப்பு வைத்ததால் லாபம் ஈட்டும் மக்காச்சோள விவசாயிகள்!

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது: ரூ. 6-ஆக நிா்ணயம்

குறுவை, சிறப்புப் பருவப் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

நூல் விலை மீண்டும் ரூ.5 உயா்வு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


