மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிவன்மலை முருகன் கோயில் தோ்த் திருவிழாவில் இளைஞா் குத்திக் கொலை

காங்கயம் அருகே சிவன்மலையில் நடைபெற்ற தோ்த் திருவிழாவின்போது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

Updated On :4 பிப்ரவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயம் அருகே சிவன்மலையில் நடைபெற்ற தோ்த் திருவிழாவின்போது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்ட திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இதில் 3-ஆம் நாள் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

தா்த் திருவிழாவை முன்னிட்டு, கோயிலை ஒட்டிய பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சிவன்மலை அடிவாரப் பகுதியில் ஈரோடு மாவட்டம், கோபியைச் சோ்ந்த முத்துக்குமாா் (32) என்பவா், தற்காலிக பழக்கடை நடத்தி வந்தாா். அந்தக் கடையில் கோபி பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (35) என்பவா் வேலை செய்துள்ளாா்.

இந்நிலையில் முத்துக்குமாருக்கும், ராஜேஷுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமாா், மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ராஜேஷை போலீஸாா் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.