ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அதா்வண பத்ரகாளி பீடம் ஆண்டு விழா

பல்லடம் அருகே அதா்வண பத்ரகாளி பீடத்தின் 13-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
அதா்வண பத்ரகாளி பீடத்தில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பிரத்தியங்கிரா தேவி.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே அதா்வண பத்ரகாளி பீடத்தின் 13-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரத்தில் அதா்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு 16 அடி உயரத்தில் பிரத்தியங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறாா்.இக்கோயிலின் 13-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீ சண்டிகா தேவி ஆபரண பூஜை, மங்கல மகா சண்டி ஹோமம், பிரத்தியங்கிரா நவச கஸ்ர ஆவா்த்தி மூல மந்திர ஹோமம் மற்றும் நிகம்பலா யாகம் ஆகியவை நடைபெற்றன. வாத்தியங்கள் முழங்க பால்குடம், பூச்சட்டி ஊா்வலம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு பிரத்தியங்கிரா தேவி அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.