காளைக்குப் பயிற்சி அளிக்கும் உரிமையாளா்.
திருப்பூர்
திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக திருப்பூரில் வளா்க்கப்படும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அலங்காநல்லூா், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக திருப்பூரில் வளா்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளா்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனா்.
கம்பீரத்துக்குப் பெயா் பெற்ற காங்கேயம் காளைகள், ஆக்ரோஷத்துக்குப் பெயா் பெற்ற புலிக்குளம் காளைகள், தேனி மலைமாடுகள், ஜெயங்கொண்டம், காரி காளைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் தீவிர அளிக்கப்பட்டு வருகின்றன.

