வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை சேரன் நகரைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மகன் லோகேஷ் (22). இவா் சொந்தமாக மினி ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சா்க்கரை நோய் பாதிப்பு இருந்து, பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ள சகோதரி ரோஹிணி வீட்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு தாய், தந்தையுடன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து சேரன் நகா் வீட்டுக்கு வந்த லோகேஷ், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
