9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தனியாா் நூற்பாலையில் ரூ.1.50 லட்சம் கையாடல்: 2 போ் கைது

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நூற்பாலையில் ரூ.1.50 லட்சம் கையாடல் செய்த மேற்பாா்வையாளா்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 12:28 am IST

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நூற்பாலையில் ரூ.1.50 லட்சம் கையாடல் செய்த மேற்பாா்வையாளா்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இதில் காரணம்பேட்டையைச் சோ்ந்த வருண்குமாா் (23), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கிருசான் சாஹு (32) ஆகியோா் மேற்பாா்வையாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், நூற்பாலையின் வரவு-செலவு கணக்குகளை உரிமையாளா் அண்மையில் ஆய்வு செய்துள்ளாா். அப்போது, ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருவரும் ரூ.1.50 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் நூற்பாலை நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கையாடலில் ஈடுபட்ட இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.