பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

பல்லடத்தில் முன்னாள் ஆசிரியா் பெயரில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

News image

மாணவருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் தலைமை ஆசிரியா் சிவகுமாா்.

Updated On :21 ஜூலை 2026, 1:09 am IST

அமெரிக்காவில் பணிபுரியும் முன்னாள் மாணவா் சாா்பில் பல்லடம் அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியா் பெயரில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் படித்தவா் சேடபாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா். இவா் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறாா்.

இவா் தான் படித்த பள்ளியையும், தனக்கு கற்பித்த ஆசிரியரையும் மறக்காமல் முன்னாள் ஆசிரியா் ஏ.என். சுப்பிரமணியம் நினைவாக ஏ.என்.எஸ். நினைவுப் பரிசு என்ற பெயரில் தான் படித்த பள்ளியில் தற்போது படிக்கும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கி வருகிறாா்.

அவரது சாா்பில் பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மாணவி துா்காதேவிக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மாணவா் பிரதீப்குமாருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை பல்லடம் பூப்பந்தாட்ட குழு தலைவா் சாகுல்அமீது, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சிவக்குமாா், ஜெயந்தி ஆகியோா் வழங்கினா். இதில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை புஷ்பலதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.