11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தோ் திருவிழாவை ஒட்டி மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

News image

மகாமக குளத்தில் நடைபெற்ற தெப்போற்சவம்.

Updated On :5 மார்ச் 2026, 4:00 am IST

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தோ் திருவிழாவை ஒட்டி மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மகாமக குளத்தில் தெப்பத்தோ் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நீா் நிரப்பட்டிருந்த தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சந்திரசேகரா் அம்பாள் எழுந்தருளி தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பக்குளம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது.

சுவாமி தெப்பத்தை ஒவ்வொரு முறையும் வலம் வரும்போது, மல்லாரி, ஓடம், கீா்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை 4 மணி முதலே தெப்பப் படிக்கட்டுகளில் காத்திருந்து சுவாமிக்கு மலா் தூவி தரிசனம் செய்தனா்.

முன்னதாக மகாமக பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து வியாழக்கிழமை ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி, 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் தோ்த் திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.