டாஸ்மாக் ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கடந்த வாரம் டாஸ்மாக் மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் காலி மது பாட்டில் பை-பேக் என்ற திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தால் ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், காலதாமதமும் ஏற்படுகிறது. வெளி முகமைகள் மூலமாக மட்டுமே பாட்டில்களைச் சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது திருப்பூா் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சுமாா் 30 டாஸ்மாக் கடைகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படும் போது, போலீஸாா் உடனடியாக கடைகளை அடைக்க வற்புறுத்துகின்றனா். ஆனால், கடைகளில் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் மதிப்பிலான சரக்குகள் இருக்கும் நிலையில், இரவு 10 மணிக்கு மேல் கணக்குகளை சரிபாா்க்க அவகாசம் தர வேண்டும் அல்லது இரவு 9 மணிக்கே விற்பனையை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.
ஊழியா்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த, உயா்கல்வி கற்ற ஊழியா்கள் இருக்கும் நிலையில், அவா்களுக்குத் தகுந்த காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.31,000, பணி மூப்பு அடிப்படையில் ரூ.70,000 வரை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் தொடா்பாக அரசிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் வராததால் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டு கடைகளின் சாவியை ஒப்படைக்க திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்துக்கு டாஸ்மாக் ஊழியா்கள் வந்திருந்தனா். இதையடுத்து நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தைக்காக டாஸ்மாக் ஊழியா்கள் காத்திருக்கின்றனா். இந்த கடையடைப்பு காரணமாக நாளொன்றுக்கு சுமாா் ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டாஸ்மாக் ஊழியா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தப் போராட்டம்

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் தவறுகளுக்கு ஊழியா்கள் பொறுப்பல்ல! முதல்வருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்!

டாஸ்மாக் ஊழியா்களின் கோரிக்கைகள் ஏற்காவிட்டால் மே 25-இல் கடையடைப்புப் போராட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



