அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முயல் வேட்டை: ரூ. 20 ஆயிரம் அபராதம்

தீர்த்தமலை அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:46 am

DIN

தீர்த்தமலை அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.
தீர்த்தமலை வனச் சரகர் எஸ். தண்டபாணி தலைமையிலான வனத் துறையினர் தாம்பல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் 2 பேர் முயல்களை வேட்டையாடி சமையல் செய்வது தெரியவந்தது.
விசாரணையில் அந்த இருவரும் நீப்பத்துறை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் கண்ணன் (47), அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (70) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் (அரூர்) எஸ். செண்பகப்பிரியா உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.