பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் வெள்ளிக்கிழமை ( நவ.17) தொடங்குகிறது.
சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரைஆலை வளாகத்தில் காலை 9.15 மணியளவில், 2017-18-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணிகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைக்கிறார். விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகிக்கிறார். விழாவில் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ரா.கீர்த்திபிரியதர்சினி, தலைவர் எம்.வளர்மதி முருகேசன், துணைத் தலைவர் ஆர்.பார்த்திபன், நிர்வாகக்குழு இயக்குநர்கள், விவசாயிகள், ஆலை அங்கத்தினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.
உணவுப் பாதுகாப்புத் துறையினர் பொம்மிடியில் ஆய்வு
அரூர், நவ. 15: பொம்மிடியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி வட்டாரப் பகுதியில் டீ தூள், பருப்பு, இனிப்புகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் அதிக அளவில் கலப்படம் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார்கள் பல வந்தன.
இதையடுத்து, அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரா.கவிதா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஆர்.பிருந்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொம்மிடி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள், கலப்பட பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.