இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலகோட்டில் சுதந்திர தின விழா

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு வட்டாரப் பகுதிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு வட்டாரப் பகுதிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
வீரநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை எம்.வசந்தா, சின்னாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சி. ஸ்ரீதரன், அரூர் அரசு அலுவலர் ஒன்றியத்தின் சங்க அலுவலக வளாகத்தில் சத்துணவு சங்க ஒன்றியத் தலைவர் எம்.அண்ணாமலையும், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அந்தக் கல்வி நிறுவனங்களின் தலைவர் வி. முருகேசனும் தேசியக் கொடியேற்றினர்.
அதுபோல எருமியாம்பட்டி இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களில் தாளாளர் இ.ஆர். செல்வராஜ், இ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் த. சக்தி, இந்தியன் கல்வி நிறுவனங்களில்  தலைவர் ஏ.கே.பழனியப்பன், செக்காம்பட்டி பி.டி.ஆர்.டி பத்மாவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் ஆர்.ராதாகிருஷ்ணன், எச்.தொட்டம்பட்டி ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தலைவர் எம்.ரத்தினம், சின்னாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி.சந்திரசேகர், மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தலைவர் கே.சென்னகிருஷ்ணன், கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எம்.வேடியப்பன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
அம்ருதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் ஆர். சுப்பிரமணியம்,  சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தலைவர் தங்கராஜா, மேளையானூர் ஸ்ரீ வெற்றி விகாஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் என். குப்புசாமி,  எச். புதுப்பட்டி வாகை வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் (ஓய்வு) ஏ. மாணிக்கம், கடத்தூர் கிரீன் பார்க் மெட்ரிக். பள்ளி தாளாளர் எவரஸ்ட் ஆர். முனி ரத்தினம், இமாலயன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நிர்வாக மேலாளர் நவபாரத் எஸ். செம்முனி, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களில் தலைவர் கே.மாரியப்பன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
மொரப்பூர் விஸ்வபாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் கே.கே. சாட்சாதிபதி, ஸ்ரீ குமரகுரு கல்வி நிறுவனங்களின் செயலர் வி.பழனிசாமி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தலைவர் ஜி. பிரபாகரன் ஆகியோர் அந்தந்தப் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தேசியக் கொடியேற்றினர்.
பாலக்கோட்டில்...
பாலக்கோடு அருகே காமலாபுரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
புலிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்  ஜெயந்தி தலைமை வகித்தார். பேகார அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நல்ல மதிப்பெண்  பெற்ற  மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.