மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகளில் தருமபுரி காந்திநகர் செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில், இறகுப்பந்து போட்டியில், 14 வயதுக்குள்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் ஏ. ஆதிஸ்வரன், இரட்டையர் பிரிவில் மாணவர் எஸ்.சஞ்சய், 17 வயதுக்குள்பட்டோர் மாணவியர் பிரிவில் வி. ஐஸ்வர்யா ஸ்ரீ, இரட்டை பிரிவில் ஸ்ரீநிதி, 19 வயதுக்குள்பட்ட மாணவியர் இரட்டையர் பிரிவில் கே. கோபிகா மற்றும் எஸ்.சிந்தான பாரதி ஆகியோர் முதலிடம்
பெற்றனர்.
அதேபோல, பூப்பந்துப் போட்டியில் 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் டி.எஸ். ஆதித்தியா, இரட்டையர் பிரிவில் எஸ்.விஸ்வா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இந்த மாணவ, மாணவியர் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றனர். போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி, வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் வன்கொடுமை.. தில்லி உயர்நீதிமன்றம் அளித்த காட்டமான பதில்!
லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!
தெய்வ தரிசனம்... பாவங்கள் அகலும் திருநாரையூர் சௌந்தரேஸ்வரர்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


