ஹிந்தி தேர்வு: தருமபுரியில் 1,700 பேர் எழுதினர்
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வை 1,700 பேர் எழுதினர்.
தமிழ்நாடு தட்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஹிந்தியில் பிராத்மிர், மத்யமா, ராஷ்டிரபாஷா ஆகியத் தேர்வுகள் தருமபுரி அருகே உள்ள எஸ்.வி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வை 1700 பேர் தேர்வெழுதினர். மேலும், வருகிற பிப். 17 மற்றும் 18 ஆகிய 2 நாள்களிலும் இத் தேர்வு நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
