கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கார் மரத்தில் மோதி விபத்து: தருமபுரி இளைஞர் சாவு

கோவை மாவட்டம்,  அன்னூர்-சத்தி சாலையில் பசூர் அருகே   நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:26 am

DIN

கோவை மாவட்டம்,  அன்னூர்-சத்தி சாலையில் பசூர் அருகே   நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
  தருமபுரி மாவட்டம்,  பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன்  விஜயபாரத் (25).  இவர் தனது நண்பர்கள் அகிலன் (23),  ஸ்ரீதர் (23) ஆகியோருடன் காரில் அன்னூர்-சத்தி சாலையில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தார்.  அப்போது,  பசூர் அருகே  திடீரென நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
  இவ்விபத்தில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியிலேயே விஜயபாரத் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அகிலன், ஸ்ரீதர் ஆகிய  இருவரும் கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.