தருமபுரியில் விருது பெற்ற சாதனை விவசாயியை, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தருமபுரி அருகே குள்ளனூரைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி. இவர், கடந்தாண்டு ஒரு ஹெக்டேர் நிலத்தில் பழைய மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, 19 ஆயிரத்து 125 கிலோ நெல் அறுவடை செய்து சாதனை படைத்தார்.
இவரை சிறந்த விவசாயியாகத் தேர்ந்தெடுத்து தமிழக அரசு பதக்கம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டியது.
தமிழக அரசின் விருது பெற்ற விவசாயி முனுசாமியை தருமபுரிக்கு நேரில் வந்து சந்தித்த புதுச்சேரி வேளாண் அமைச்சர் இரா.கமலக்கண்ணன், அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி விவசாயி நெல் சாகுபடியில் சாதனை படைத்துள்ளதற்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது. எனவே, இவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். மேலும், அவர் சாகுபடியில் பயன்படுத்திய தொழில்நுட்ப முறைகளைக் கேட்டறிந்துள்ளோம். அவரின் அனுபவத்தையும், கடைப்பிடித்த முறைகள் குறித்தும் புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு பரிந்துரைக்க உள்ளோம். மேலும், காவிரி விவகாரத்தில் புதுச்சேரி மாநிலத்துக்குரிய பங்களிப்பு தண்ணீரை ஆணையம் மூலம் பெறுவோம். இதில் சமரசம் அடைய மாட்டோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








