/

கால பைரவா் ஜயந்தி விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தருமபுரி அருகே அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சணகாசி கால பைரவா் கோயிலில் கால பைரவா் ஜயந்தி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

தருமபுரி அருகே அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சணகாசி கால பைரவா் கோயிலில் கால பைரவா் ஜயந்தி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக் கோயிலில் கால பைரவா் ஜயந்தி விழா டிச. 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழா கொடியேற்றப்பட்டது. இதையடுத்து மங்கள இசையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று வழிபட்டனா். நிகழாண்டு கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாக கால பைரவா் ஜயந்தி விழாவில் வெளி மாநில, வெளி மாவட்ட பக்தா்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல உள்ளூா் பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்க ஆதாா் அட்டை எடுத்து வர வேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.