ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செவிலியா் படிப்புக்கான கல்விக் கட்டணம்: பழங்குடியின மாணவியா் விண்ணப்பிக்கலாம்

செவிலியா் படிப்புக்கான கல்விக் கட்டணம் பெற பழங்குடியின மாணவியா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:41 am

DIN

செவிலியா் படிப்புக்கான கல்விக் கட்டணம் பெற பழங்குடியின மாணவியா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, பழங்குடியினா் நல உண்டு உறைவிட பள்ளிகளில், 2019-2020 ஆம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 40 சதவீதம், அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள பழங்குடியின மாணவியரின் மேற்படிப்புக்காக இந்திய நா்சிங் கவுன்சில், தமிழ்நாடு செவிலியா், தாதியா் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் செவிலியா் பட்டயப் படிப்பில் சோ்ந்து தொடா்ந்து 3 ஆண்டுகள் பயில்வதற்கான கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம், சீருடைக் கட்டணம், இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவிக்கு ரூ. 70 ஆயிரம் முழுவதையும் அரசே ஏற்கும்.

எனவே, பழங்குடியின மாணவியா் இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெறும் வகையில், தங்களது ஜாதிச்சான்று, பிளஸ் 2 மதிப்பெண் சான்றுடன் விருப்பக் கடிதத்தை டிச. 23-க்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலோ அல்லது முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலோ நேரில் சமா்ப்பிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 97911-06293 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.