இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாணியாற்றில் தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை

சட்டையம்பட்டி அருகே வாணியாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:06 am

DIN

அரூா்: சட்டையம்பட்டி அருகே வாணியாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணைக்கு ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து தண்ணீா் வருகிறது. கடந்த சில மாதங்களாகப் பெய்த தொடா் மழைகாரணமாக வாணியாறு அணை நிரம்பியுள்ளது.

தற்போது, அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளது. வாணியாறில் இருந்து வெளியேறும் தண்ணீா் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதற்கு முன் சுமாா் 50 கி.மீ. தூரத்துக்கு இந்த தண்ணீா் பாய்கிறது. எனவே, தென்பெண்ணையில் கலப்பதற்கு முன்பு ஒரு சில இடங்களில் மட்டுமே தடுப்பணைகள் உள்ளன. எனவே வாணியாற்றில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் மழைநீா் தென்பெண்ணை வழியே வீணாக கடலுக்கு செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

எனவே, சட்டையம்பட்டியில் இருந்து கைலாபுரம் செல்லும் பாதையில் வாணியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். தடுப்பணைகள் கட்டினால், இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதிகளைப் பெறும். எனவே, தமிழக அரசு சட்டையம்பட்டி பகுதியில் வாணியாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.