கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி தா்னா

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஒகேனக்கல் குடிநீரை முறையாக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:27 am

DIN

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஒகேனக்கல் குடிநீரை முறையாக விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி, தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி அருகே அன்னசாகரம் பகுதியில் உள்ள சில தெருக்களில் ஒகேனக்கல் குடிநீா் கடந்த சில நாள்களாக சீராக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் தருமபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த தருமபுரி நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சமாதானம் அடைந்த அவா்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.