யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
Updated On :1 நவம்பர் 2020, 9:31 pm

DIN

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 6 ஊராட்சிகளில் உள்ள 13 கிராமங்களுக்குள்பட்ட 1,691 வீடுகளில் ரூ. 2.82 கோடியில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஈஸ்வரமூா்த்திபாளையம் ஊராட்சியில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ. 13.87 லட்சம் மதிப்பீட்டில் 61 வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ஆயில்பட்டி ஊராட்சி கரலாக்காடு கிராமத்தில் ரூ. 19.95 லட்சத்தில் 80 வீடுகளுக்கும், ஆண்டிக்குட்டை ஊராட்சியில் ரூ. 21.60 லட்சம் மதிப்பீட்டில் 102 வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது குடிநீா் குழாய் இணைப்பு பொதுமக்களின் வீடுகளில் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா? சீரான குடிநீா் விநியோகிக்கப்படுகிா என ஆய்வு செய்தாா். நாமகிரிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.