கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தருமபுரியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

தருமபுரியில் பணி வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
தருமபுரியில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றோர்.
Updated On :2 அக்டோபர் 2020, 9:13 am

DIN

தருமபுரியில் பணி வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவர் சபரிமாலா தலைமை வகித்து பேசினார். இப்போராட்டத்தில் கடந்த 2013-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி,,சேலம் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் பங்கேற்ற, பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவர் சபரிமாலா உள்ளிட்ட 300 பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.