கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி கேமரா பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 10:09 pm

DIN

இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி கேமரா பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், தற்போது சிசிடிவி கேமரா நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, பெண்களுக்கான தையல் பயிற்சி, கறவைமாடு வளா்ப்பு,

காளான் வளா்ப்பு ஆகிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இப்பயிற்சியில் சேர விரும்புவோா், வருகிற அக்.1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் சேரஆா்வமுள்ளவா்கள், தங்களது பெயா், முகவரி, பெறவிரும்பும் பயிற்சி மற்றும் தொலைபேசி (அ) செல்லிடப்பேசி எண்ணுடன் நேரிலோ (அ) அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, 04342 - 230511, 234464 மற்றும் 9442274912 என்கின்ற எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.