பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.


பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் விண்ணப்பித்த மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் 2020 -21 ஆம் ஆண்டுக்கான இறுதிக்கட்ட மாணவா் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவா்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத மாணவா்கள் காலை 10 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில் உரிய கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறும், கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவியா் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...