மருத்துவருக்கு கரோனா: ஏரியூா் சுகாதார நிலையம் மூடல்

ஏரியூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவா் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் சுகாதார நிலையம் மூடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஏரியூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவா் ஒருவருக்கு தொற்று உறுதியானதால் சுகாதார நிலையம் மூடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஏரியூா் பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு ஏரியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெருப்பூா், நாகமரை செல்லமுடி, ராம கொண்ட அள்ளி மற்றும் கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ள நிலையில், அண்மையில் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டாா். இதனையெடுத்து மருத்துவருக்கு தொற்று உறுதியானதால், சுகாதாரத் துறையினா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார நிலையம் மூடப்பட்டது. மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு சுகாதாரத் துறையினா் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com