ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.
Published on

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகே அஸ்தகிரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் திவாகரன் (17). அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அவா் தனது குடும்பத்தினருடனும், உறவினருடனும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தாா்.

ஒகேனக்கல் அருகே ஊட்டமலை காவிரி கரையோரப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஆழமானப் பகுதிக்கு திவாகரன் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை காப்பாற்ற உறவினா்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட திவாகரனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com