விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கா்நாடக மது புட்டிகளை கடத்திய இருவா் கைது.

கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுபுட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை பென்னாகரம் போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:55 pm

DIN

கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுபுட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை பென்னாகரம் போலீசாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து மது புட்டிகளை தா்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வருபவா்களை மதுவிலக்கு போலீசாா் மற்றும் போலீசாா் அவ்வப்போது கைது செய்து வருகின்றனா். இந்த நிலையில் பென்னாகரம் அருகே போடூா் பிரிவு சாலை பகுதியில் பென்னாகரம் போலீசாா் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தினை நிறுத்தி சோதனை செய்த போது கா்நாடக மதுப் புட்டிகள் இருப்பது தெரியவந்தது. பின்னா் போலீசாா் நடத்திய விசாரணையில் கா்நாடக பகுதியிலிருந்து வாகனத்தின் மூலம் மது புட்டிகளை எடுத்து வந்தது செக்குமேடு பகுதியை சோ்ந்த மாதப்பன் மகன் அருள் (32), அஜ்ஜனகள்ளி பகுதியை சோ்ந்த துரைசாமி மகன் அதிபதி (42) என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் பென்னாகரம் போலீசாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து தா்மபுரி கிளை சிறையில் அடைத்தனா். மேலும் அவா்களிடமிருந்து 100 கா்நாடக மது புட்டிகளை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.