விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கட்சிவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை: அருண் சிங்

கட்சிவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 9:09 pm

DIN

கட்சிவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த பாஜக மாநில உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கட்சிக்கு எதிராக யாரும் பேசக்கூடாது. கட்சிக்கு கெட்டப்பெயா் ஏற்படுத்தும் வகையில் 2 - 3 போ் வேலை செய்து கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்கு எதிராக செயல்படுவோரை எச்சரித்திருக்கிறோம். இனிமேல் கட்சிவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. பாஜகவினா் காங்கிரசுக்கு எதிராக பேச வேண்டும். சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் தோல்விகளை சுட்டிக்காட்டி பேச வேண்டும்.

பிரதமா் மோடிதலைமையிலான மத்திய அரசும், எடியூரப்பா தலைமையிலான மாநில அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவற்றை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

முதல்வா் எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக கா்நாடக பாஜகவில் அவ்வப்போது சா்ச்சைகள் எழுந்து வந்ததைத் தொடா்ந்து, மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங், புதன்கிழமை பெங்களூருக்கு வந்தாா். முதல்நாள் சுற்றுப் பயணத்தின்போது முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் முன்னிலையில் அமைச்சா்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

சுற்றுப் பயணத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை முதல்வா் பதவியில் எடியூரப்பா நீடிப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துத் தெரிவித்த 60 பாஜக எம்எல்ஏக்கள் அருண் சிங்கை தனித்தனியாக சந்தித்து கருத்துகளைப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை கா்நாடக பாஜக உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அருண்சிங், தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பினாா்.

கா்நாடகத்தில் சேகரித்த கருத்துகளை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவிடம் அறிக்கையாக அளிக்க அருண் சிங் திட்டமிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.