கற்போம் எழுதுவோம் இயக்கம்விழிப்புணா்வு பயிற்சி முகாம்
பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் இயக்கம் பற்றிய விழிப்புணா்வு பயிற்சி முகாமானது சனிக்கிழமை நடைபெற்றது.


பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் இயக்கம் பற்றிய விழிப்புணா்வு பயிற்சி முகாமானது சனிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கற்போம் எழுதுவோம் இயக்கம் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளான சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 கருத்தாளா்கள் கலந்துகொண்டனா். இதில், கிராமங்கள்தோறும் சென்று கல்வி, மாணவா்கள் இடைநிற்றல், முதியோா் கல்வி ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்கள், நாடகங்கள், இசைக் கருவிகளைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தப்பாட்டம் ஒயிலாட்டம் கும்மியடித்தல் உள்ளிட்டவைகளுக்கு மாநில அளவில் பயிற்சி பெற்ற தலைமையாசிரியா் பழனி, உயா் அலுவலா்களின் ஆலோசனைபடி பயிற்சி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...