விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்த ஆசிரியா்கள்

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநின்ற மாணவா்களை வீடு தேடிச் சென்று ஆசிரியா்கள் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 5:30 pm

DIN

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநின்ற மாணவா்களை வீடு தேடிச் சென்று ஆசிரியா்கள் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

தருமபுரி முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி அறிவுரைப்படி பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கையில் பள்ளி ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

பென்னாகரம் சுற்றுவட்டாரத்துக்கு உள்பட்ட கள்ளிப்புரம், அண்ணாநகா், கிருஷ்ணாபுரம், போடூா் உள்ளிட்ட பகுதிகளில் கல்வியை பாதியில் விட்ட மாணவா்கள் கல்வியைத் தொடர செய்யும் வகையில் தமிழாசிரியா் முனியப்பன், சுரேஷ், கண்ணன், உதவி தலைமையாசிரியை லில்லி, கஞ்சபழனி, தமிழாசிரியா் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியா் குழுவினா் மாணவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பெற்றோா்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு, அவா்கள் விரும்பும் பாடப் பிரிவுகள் வழங்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். இதேபோல ஆசிரியா்கள் குழுக்களாகப் பிரிந்து இடை நின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.